இங்கே பவுல் கூறுவது போல கர்த்தர் கட்டளையிட்டிருப்பது எங்கே? பழைய ஏற்பாட்டில் இப்படி வசனம் எங்காவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் விளக்கம் தாருங்கள் பிளீஸ்?
இங்கே பவுல் கூறுவது போல கர்த்தர் கட்டளையிட்டிருப்பது எங்கே? பழைய ஏற்பாட்டில் இப்படி வசனம் எங்காவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் விளக்கம் தாருங்கள் பிளீஸ்?
பழைய ஏற்பாட்டில்:
தேவனுடைய ஊழியர்களாகிய ஆசாரியர்களுக்கு இஸ்ரவேலரின் தசமபாகம் பிழைப்பாக கொடுக்க தேவன் கடடளையிடடார்.
எபிரெயர் 7:5லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
புதிய ஏற்பட்டில்:
சுவிசேஷம் சொல்பவர்களுக்கு அதனால் பிழைப்பு உண்டு என்று நம் கர்த்தராகிய இயேசு கடடளையிட்டிருக்கிறார்.
லூக்கா: 10 அதிகாரம்
1. இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்4. பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
இவ்வாறு ஊழியர்களை ஆதரித்து தாங்குபவர்களுக்கு அதனால் பலன் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார்.
மத்தேயு 10:42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.