'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவ வாழ்வில் முக்கியமானவை எவை?


adminn

Status: Offline
Posts: 29
Date:
கிறிஸ்தவ வாழ்வில் முக்கியமானவை எவை?
Permalink  
 


சகோதர சகோதரிகளே நீங்கள் ஒரு ஜெப வீரரா?  தினமும் தேவனை ஆராதிக்கிறீர;களா? தேவனுக்கு தவறாமல் காணிக்கைகளை கொடுக்கிறீர்களா? வாரம் தோறும் தவறாமல் ஆராதனைக்கு சென்று வருகின்றீர்களா? நல்லது. 

நீங்கள் ஒரு போதகராய், மேய்ப்பராய், தீர்க்கதரிசியாய், பாடகர் குழு பாடகராய், தேவனுக்காய் இசைக்கருவிகளை இசைப்பவராய், துதி ஆராதனையில் வழிநடத்துபவராய் இருக்கிறீர்களா? சபையில் வேறு ஏதாவது ஊழியங்களை செய்கிறீர்களா? உங்களைக் கொண்டு கர்த்தர் அற்புத அடையாளங்களை செய்கிறாரா? மிக மிக நல்லது. 

நீங்கள் செய்யும் ஊழியத்தை மிகவும் மேன்மையாய் கருதி செய்யுங்கள். தேவன் கொடுத்த ஊழியத்தில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. உங்கள் ஊழியம் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்ற கனமுள்ள ஊழியமாகும்.  

ஆனால் ஒன்று தெரியுமா? தேவனை ஆராதிப்பதை விடவும், தேவனுக்கு ஊழியம் செய்வதை விடவும் முக்கியமான காரியங்கள் சில இருக்கின்றன. பல வேளைகளில் நாம் அவைகளை கருத்தில் கொள்வதில்லை. ஆனால் தேவன் அவைகளைத்தான் முக்கியமாக கருதுகிறார். அவைகளை வேதத்திலிருந்து தியானிப்போம்.

 

1.பலியிடுதலையும் ஆராதனைகளையும் விட முக்கியமானவை 

  • தேவனிடத்தில் அன்பு கூருதல்.

(மாற் 12:33) முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பலத்தோடும் அவாpடத்தில் அன்புகூருகிறதும்.… சா்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.

 

  • பிறரிடத்தில் அன்பு கூருதல்.

(மாற் 12:33) …தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சா்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.

  • செவிகொடுக்கச் சேருதல்.

(பிர 5:1) மூடா் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சோ்வதே நலம்.

(1சாமு 15:22) கா்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சா்வாங்க தகனங்களும் பலிகளும் கா;த்தருக்குப் பிhpயமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.

  • கீழ்ப்படிதல்

(1சாமு 15:22) அதற்குச் சாமுவேல்: கா்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சா்வாங்க தகனங்களும் பலிகளும் கா்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.



2. காணிக்கை கொடுப்பதை விட முக்கியமானவை

  • சகோதரனோடு ஒப்புரவாகுதல்

(மத் 5:23-24) ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்போpல் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. 

 

  • தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுதல்

மத்-15:5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, 

(மாற் 7:11) நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது என்று சொல்லி…

 

  • நியாயம் செய்தல்

(லூக் 11:42) பாிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

 

  • தேவ அன்பு

(லூக் 11:42) பாரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

 

3. ஜெபிப்பதை விட முக்கியமானது

  • வேதத்துக்கு செவிகொடுத்தல்

(நீதி 28:9) வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. 

 

4. பாரம்பரியங்களையும், சடங்குகளையும் விட முக்கியமானது

  • தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல்

(மாற் 7:8) நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பாpயத்தைக் கைக்கொண்டுவருகிறவார்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசாித்துவருகிறீர்கள் என்றார்.





__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard