'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எதிர்பார்ப்பில்லாத மாறாத அன்பு!


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 13
Date:
எதிர்பார்ப்பில்லாத மாறாத அன்பு!
Permalink  
 


எதிர்பார்ப்பில்லாத மாறாத அன்பு!

 

இன்று உலகின் அனைத்து மனிதர்களும் ஒரு விடயத்துக்காக ஏங்குகின்றார்கள் என்றால் அது உண்மையான அன்பிற்கு தான்.

 

ஆனால் யாருக்கும் இந்த உண்மையான அன்பு கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்..

 

எங்கு சென்றாலும் எதிர்பார்ப்புகளுடன் பழகுகிற  உறவுகளே அநேகம்...

 

தாயானுலும்தகப்பனானாலும்மகனானாலும்மகளானாலும்கணவனானாலும்மனைவியானாலும் வேறே எந்த உறவானாலும் எதிர்பார்ப்புக்களுடனே நம்முடன் பழகுகிறது.. இன்று தொலைக்காட்சிகளிலும்பத்திரிக்கைகளிலும் அன்பு தணிந்து போனதை காண கூடியதாயிருக்கிறது.. தகப்பன் தன் இரத்தமாகிய தான் பெற்ற மகளை கற்பழிப்பதும்சொத்துக்காக பெற்றோரை கொலை செய்யும் பிள்ளைகள்மனைவியை வெட்டி கொல்லும் கணவன்கள்ள தொடர்புகளுக்காக கணவனை திட்டமிட்டு கொலை செய்யும் மனைவி இவ்வாறு அடுக்கி கொண்டே போகலாம்.. இவைகள் கொடூரத்தின் உச்ச கட்டங்களாக குறிப்பிடலாம்.

 

இவை எல்லாவற்றிற்கும் அடித்தள காரணமாக இருப்பது அன்பு இல்லாமையே ஆகும்...

 

இவ்வுலகில் அன்பிற்கு உதாரணமாக இருப்பது தாய்அதாவது சிறந்த அன்பாக உலகில் கருதப்படுவது தாயன்பு மாத்திரமே.. சில வேளைகளில் அதுவும் பொய்மையான நேரங்கள் உண்டு...

 

பரிசுத்த வேதத்தில் குறிப்பிடப்பட்ட விதமாக இன்று அநேகரின் அன்பு தணிந்து போய் கொண்டிருக்கிறது..

 

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

மத்தேயு 24 :12

 

ஆனால் இவைகள் எல்லாம் இப்படி இருந்தாலும்............

 

தாயின் அன்பு மாறும்

தகப்பனின் அன்பு மாறும்

கணவனின் அன்பு மாறும்

மனைவியின் அன்பு மாறும்

 

மாறாதது மாறாதது

நம் நேசர் அன்பு மாறாதது

நம் இயேசு அன்பு மாறாதது....

 

என்ற பாடலின் பிரகாரம் நமக்காக மரித்து தன் ஜீவனை எமது பாவத்தின் தண்டனைக்கு பரிகாரமாக கொடுத்த ஒருவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து... அந்த அன்பு தெய்வத்தின் அன்பு ஒன்று மட்டுமே எதிர்பார்ப்பு இல்லாத உன்னத அன்பு.. அது எப்பவும் மாறாத அன்புஅள்ள அள்ள குறையாத அன்புருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு....

 

அதற்கு சான்றாகவே அந்த கோர சிலுவையை அந்த அன்பு தெய்வம் சுமந்து தீர்த்தது.. அவர் எம்முடைய அக்கிரமங்களுக்காக அடித்து நொறுக்கப்பட்டார் என்பது நாம் அறிந்த மறக்க கூடாத உண்மையாகும்..

ரோமர் 3:12  எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

என்ற வார்த்தைபடி

 நமது அக்கிரமத்தின் நிமித்தம்  நமக்கு கிடைக்க வேண்டிய  அதியுட்ச தண்டனையை நம்மேல்  வைத்த அதியுன்னத அன்பின் நிமித்தம்  அவர் ஏற்று கொண்டு நம்மை இரட்சித்தார்.... இது அவர் மேல் விழுந்த கடமையல்ல அவர் நம்மேல் வைத்த கிருபை..

கிருபை என்றால் நாம் செய்ய வேண்டியதை வேறு யாரோ நமக்காக செய்து முடிப்பது...

ஏசாயா 53 :

2. இளங்கிளையைப்போலவும்வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்அவருக்கு அழகுமில்லைசௌந்தரியமுமில்லைஅவரைப் பார்க்கும்போதுநாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும்மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்துக்கம் நிறைந்தவரும்பாடு அநுபவித்தவருமாயிருந்தார்அவரைவிட்டுநம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்அவரை எண்ணாமற்போனோம்.

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டுநம்முடைய துக்கங்களைச் சுமந்தார்நாமோஅவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டுசிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டுநம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்ததுஅவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

 

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்துஅவனவன் தன் தன் வழியிலே போனோம்கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

 

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லைஅடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும்தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

8 . என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றிஅக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டுஅநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்துஅக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம்......

இவை அனைத்தும் நம்மேல் அவர் வைத்த எதிர்பார்ப்பில்லா அன்பின் நிமித்தம் உண்டானது..

உலகிலே உன்னத அன்பாக கருதப்படுகின்ற தாயின் அன்பை விட மேலான அன்பே நம் இயேசுவின் அன்பு..

 

எனவே இயேசுவின் அன்பை பற்றி கொண்டு அவரையே சார்ந்து வாழ்வோம்..

கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக!



__________________


adminn

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இயேசுவின் அன்பைக் குறித்து மிக தெளிவாக எழுதியுள்ளீர்கள் சகோதரி..
தேவன் அன்பாகவே இருக்கிறார்என்னும் உண்மையைச் சார்ந்து உங்கள் கட்டுரை காணப்படுகின்றது. எவ்வளவு உண்மை. இன்று அநேகர் கடவுளுக்காக என்னவெல்லாமோ செய்ய பிரயாசப்படுகின்றனர். ஏதாவது செய்து கடவுளின் அன்பைப் பெற்று அவரிடமிருந்து மன்னிப்பை பெற்றுக் கொள்ள முயற்சிசெய்கின்றனர். தான தருமங்கள், புண்ணியங்கள், தம்முடைய உடலையே வருத்திக் கொள்ளுதல் என்று எவ்வளவோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் எதிர் பாராத மெய்யான அன்பை அவர்கள் அறிந்து கொள்ளாமையே இதற்கெல்லாம் காரணமாகும்.

தெரிவிக்க வேண்டிய நாமும் சில வேளை தவறி விடுகிறோம்.


///அவர் மேல் விழுந்த கடமையல்ல அவர் நம்மேல் வைத்த கிருபை..////
நீங்கள் எழுதிய இந்த சொற் தொடர் மிக சரியானது.

////கிருபை என்றால் நாம் செய்ய வேண்டியதை வேறு யாரோ நமக்காக செய்து முடிப்பது...////
இது கேட்பதற்கு புதிதாக உள்ளது.ஆனால் சரியாக சொல்லியுள்ளீர்கள் என நினைக்கிறேன். இது இயேசுவோடு சம்பந்த படுத்தி மட்டும் சொல்கிறீர்களா? அல்லது பொதுவாகவே கிருபை என்ற சொல்லுக்கு இவ்வாறு அர்த்தம் கொள்ளலாமா? கொஞ்சம் விளக்கம் தர முடியுமா please?



__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 



இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

கிருபை

நமக்கு மேல் உள்ள ஒருவர், நாம் அடையத் தகுதியற்ற தயவின் மூலம் நம்மோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைக் குறிக்கும்.

நாம் நமது சுய முயற்சிகளின் மூலமாகவோ, தகுதியின் அடிப்படையிலோ பெற்றுக் கொள்ள முடியாது

கிருபை என்றால் என்ன?
தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். "கிருபை" என்றால் "தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு" என்று பொருளாகும்.

தேர்வு எழுதியிருக்கிற ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வைத்து கொள்ளலாம். அவன் எழுதியிருப்பதற்கு 30 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடியும். திருத்துகின்ற ஆசிரியர் மதிப்பெண்களின் காரணமாக அவன் ஒரு ஆண்டை இழக்க வேண்டுமே என்று கருதி +5 என்று சேர்த்து அவனை தேர்ச்சிபெறச் செய்கிறார். அந்த 5 மதிப்பெண்களைப் பெறுவதற்கு அவன் தகுதியில்லை. ஆனாலும் ஆசிரியரின் தயவினால் அவன் தேர்ச்சி பெறுகிறான். அவர் அவனுக்குக் கொடுத்த மதிப்பெண்களை "கிரேஸ் மார்க்" என்று சொல்வார்கள்.
அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு. அதைப்போல தேவன் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் ஈவுதான் கிருபை.
அந்த மாணவன் 30 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். ஆனால் நமக்கோ எந்த தகுதியும் இல்லை. அப்படியிருந்தும் தேவன் அவருடைய மிகுந்த கிருபையினால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் சிலாக்கியத்தை பெற்றிருகிறோம். கிருபை என்ற வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம் "தகுதியற்றவனுக்கு அருளப்பட்ட ஈவு" என்ற பொருள் நம்முடைய நினைவிற்கு வரவேண்டும்.

தேவனுடைய கிருபையை நினைத்து உள்ளம் உருகும் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?. "ஆண்டவரே! என் மீது கிருபை உள்ளவரே என்று நன்றி உணர்வோடு அடிக்கடி தேவனைத் துதியுங்கள்.

இரக்கம் என்றால் என்ன?
இரக்கம் என்ற வார்த்தையின் பொருள் "நமக்கு வரவேண்டிய தண்டனையை தவிர்ப்பதற்காக தேவன் நம் மீது காட்டும் பரிவு" ஆகும். கிருபை என்ற வார்த்தையின் பொருள் தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு என்பதாகும். ஆனால், இரக்கம் என்பது தண்டனை பெற வேண்டியவர்களுக்கு தண்டனை தராமல் காட்டும் அன்பு ஆகும்.

இரக்கம் என்ற வார்த்தையில் அனுதாபம்,தயவு காட்டுதல் என்ற பொருளும் அடங்கும்

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" புலம்பல் 3 :22


"பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்."1 பேதுரு 5 :5

"கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" சங்கீதம் 103:17

"கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்." சங்கீதம் 25:10

"துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்." சங்கீதம் 32:10

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." சங்கீதம் 94:18

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். " 2 கொரிந்தியர் 15:9

சில தளங்களில் இருந்து பெறப்பட்ட சில விளக்கங்கள் அண்ணா..

இது தான் நான் அறிந்த விளக்கம்..


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard