7. ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
8. அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
9. தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.
10. மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
11. தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,
12. மனுஷன் படுத்துக்கிடக்கிறான்; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
மேலுள்ள வசனங்களில் மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான்,
மனுஷன் படுத்துக்கிடக்கிறான்; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை என்னும் வசனங்கள் கூறப்பட்டுள்ளன.
இவ்வசனங்களை வாசிக்கும் போது மனிதனின் உயிர்ததெழுதல் இல்லை என்று மறுக்கப்படுவது போல தெரிகின்றது.
அப்படி மனிதனின் உயிர்ததெழுதல் உண்டென்றாலும் வானங்கள் ஒழிந்து போன பின்புதான் அது நடைபெறும் என்றும் கூறப்படுவது போல தெரிகின்றது.
இது கீழுள்ள வசனத்துக்கு முரணானதாக தோன்றுகிறது.
I தெசலோனிக்கேயர் 4:16ஏனெனில்,கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவதுஎழுந்திருப்பார்கள்.
இவ்வசனங்கள் முரண்படுகின்றனவா?, அல்லது ஒரே கருத்தைத்தான் சொல்ல வருகின்றனவா? என யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்
-- Edited by hi christians on Friday 10th of May 2013 06:23:41 AM
-- Edited by hi christians on Friday 10th of May 2013 07:03:40 AM