மத்தேயு 27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்..... நான்றுகொண்டு என்பது யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டான் அப்போஸ்தலர் 1:18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து,குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. தலை கீழாக என்பது தன் தவறான ஆசையையும் வயிரு வெடித்து என்பது பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன்வயிறு, (அவனுடய தேவன் அதாவது வயிறு வெடித்தது) அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். .......அடுத்தது குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று என்பது ஒரு அகோரமான அல்லது பயங்கரமான சிதைந்த மரணம். உதாரணமாக 2 சாமுவேல் 20:10 தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாகக் குத்தினான்; அவன் செத்துப்போனான்;..........கொழுப்பை விட்டு குடல் களரத்தக்கதாக அதிர்வான முழுப்பலமான ஒரே குத்துபோல ......
சகோதரர் யோசுவா அவர்களை இத்தளத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம். தாங்கள் கருத்துகளை கூறியதற்கு மிகவும் நன்றி். தொடர்ந்தும் இத்தளத்தில் இணைந்திருந்து தாங்கள் அறிந்த விடயங்களை தெரிவித்தால் அநேகர் பயனடைய முடியும். இத்தளமானது இன்னும் வளர வேண்டிய தளமாகையால் இத்தளத்தின் வளர்ச்சிக்கு உங்கள் மேலதிக ஒத்தாசைகளை வழங்கி உதவி செய்யுங்கள்.
நீங்கள் சொன்ன கருத்துகள் கூட சரியாக இருக்கலாம் சகோதரர் யோசுவா அவர்களே. வேதாகமத்தின் சில விடயங்களுக்கு மற்றைய வசன ஒப்பீட்டு முறையில் விளக்கம் கூறுவதும் ஒரு சிறப்புத்தான். குடல்கள் சரிந்து போதல் என்பது ஒருவேளை உவமைநயச் சொல்லாகக் கூட இருக்கலாம். நன்றி.
இன்னும் ஒரு சிலர் கூறுகிறார்கள் யூதாஸ் தூக்கில் தொங்கும் போது அவன் கயிறு அறுந்தோ அல்லது மரம் முறிந்தோ விழுந்திருக்கலாம். எனவே தூக்கிலிட்டு செத்தான் என்பதும், விழுந்து வயிறு வெடித்து செத்தான் என்பதும் சரியானதே.
அப்போஸ்தலர் நூலிலும் மத்தேயு நூலிலும் இந்த விடயத்தில் முரண்பாடுகள் வர சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் யூதாஸ் எப்படி மரித்தான் என்னும் விடயம் அந்த கால கட்டத்தில் அந்த பிரதேசத்தில் வாழ்ந்த அதிகமான யூதர்களுக்கு தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு தெரிந்த ஒரு விடயத்தை முரண்பாடாக கூற முடியாது. கூறினால் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளப்பி யூதர்கள் முறுமுறுப்பார்கள். எனவே இவ்விரு நூல்களிலும் கூறப்பட்டிருப்பது உண்மையே.