'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்க சொல்வாரா கடவுள்?


adminn

Status: Offline
Posts: 29
Date:
குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்க சொல்வாரா கடவுள்?
Permalink  
 


“உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்” இது கடவுளின் வசனமா? மடவுள் இப்படி கூறுவாரா?

வேதாகமத்தில் 137ம் சங்கீதம் 9ம்  வசனத்தில் உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் எனும் வசனம் உள்ளது.
இந்த வசனத்தின் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் இவ்வசனத்தை மேற்கோள் காட்டி வேதாகமத்தை வசைபாடும் இஸ்லாமியர்களின் இம்சை தாங்க முடியவில்லை

வேதாகமத்தில் அகோரமான வசனம் ஒன்றை கண்டுபிடித்து விட்டார்களாம். ஒரு இறைவனின் வசனம் இப்படி கூறமுடியுமா? இறைவன் இவ்வளவு கொடுமையானவரா? என்று அறிவாளித்தனமான கேள்விகளை அவா்கள் கேட்கும் போது அதை நம்பிவிடும் அரைகுறை கிறிஸ்தவா்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்களுக்காகவே இச்சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.
    
வேதாகமத்தை பழித்துரைக்கும் இஸ்லாமியர்கள் ஒரு ஒற்றை வசனத்தை மட்டுமே மேற்கோள் காட்டும் போது அந்த வசனத்தின் முன்பின் இருக்கிற வசனங்களையும் கவனிக்கவேண்டும். அப்போது அவ் வசனத்தின் உண்மை நிலை புரிந்துவிடும். அப்படி புரியாவிட்டால் அந்த அதிகாரத்தை கவனிக்க வேண்டும். அவ் வசனம் கூறப்பட்ட காலம், பின்னணி, யாருக்கு கூறப்பட்டது யாரால் கூறப்பட்டது என்பதை ஆராய்ந்தால் உண்மை நிலையை தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.

சரி அவ்வசனத்திற்கு முதல் இருக்கிற இரண்டு வசனங்களை வாசிப்போம்

சங்கீதம் 137:7-9
7. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9. உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

7ஆம் வசனத்தில் “கர்த்தாவே” என்று தொடங்கும் போதே தெரியவில்லையா இது கர்த்தர் பேசிய வார்த்தை இல்லையென்று?
மேலும் 8 ஆம் வசனத்தை வாசிக்கும் போது என்ன விளங்குகிறது? யாரோ பாதிக்கப்பட்டவா்கள் பேசுவது போல தெரியவில்லையா?

சரி இவ்வசனத்தின் சரித்திர பின்னணியை சொல்லிவிடுகிறேன்

இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் இஸ்ரவேலின் தென் இராட்சியமான யூதாவை யோயாக்கீன் மன்னன் ஆளுகை செய்யும் காலத்தில் எரேமியா தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். அவரது முன் அறிவிப்பின் படி கி.மு 1597-1582 வரையான காலப்பகுதியில் பாபிலோன் மன்னனின் படைகள் தென் இராட்சியமான யூதாவை கைப்பற்றி யூத மக்களை அடிமைகளாக பாபிலோனுக்கு கொண்டுபோய் அவர்களை ஆண்டனர். அப்போது அங்கே அடிமைகளாயிருந்த யூதர்கள் எப்படிப்பட்ட மன நிலையிலிருந்தார்கள் என்பதை வெளிக்காட்டும் அவர்களின் புலம்பல் என்று சொல்லக்கூடிய ஒரு சங்கீதமே இந்த 137ம் சங்கீதம்.

இந்த சங்கீதத்தின் முழுமையான விளக்கத்தை தருகிறேன்.

இந்த விளக்கத்தை படித்த பின்னர் மீண்டுமொருமுறை இந்த பின்னணியை மனதில் கொண்டு இந்த சங்கீதத்தை முழுவதும் படித்துப் பாருங்கள் தெளிவடைவீர்கள்.
அடிமைகளாய் போன யூதர்கள் பாபிலோன் ஆறுகளருகே உட்கார்ந்து கொண்டு தங்கள் சொந்த நாட்டை நினைத்து அழுகின்றனர்.
சோகத்தின் மிகுதியால் வாத்தியங்களை வாசிப்பதை அவா்கள் நிறுத்தியிருந்தனர்.

அப்போது அவர்களை சிறைப்பிடித்தவர்கள் யூதர்களிடம் “உங்கள் பாடல்களை (கர்த்தரை பாடும் பாடல்களை) பாடிக்காட்டுங்கள்” என்று அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.

இதனால் வேதனையும் கோபமும் அடைந்த யூத மக்கள் தங்களை சிறைப்படித்து வந்தவா்கள் தங்களுடைய குழந்தைகளை கொன்று தங்களுக்கு அநியாயம் செய்தது போல அவர்களுக்கும் யாராவது செய்யமாட்டார்களா? என ஒரு ஆதங்கத்தில் பேசும் வார்த்தைகள் தான் இவை.
   
சரி இந்த பின்னணியை மனதில் வைத்து கொண்டு மீண்டுமொருமுறை இந்த சங்கீதத்தை வாசித்துப் பாருங்கள்.

137 ம்சங்கீதம்
1. பாபிலோன்ஆறுகள்அருகேநாங்கள்உட்கார்ந்து, அங்கேசீயோனைநினைத்துஅழுதோம்.

2.
அதின்நடுவிலிருக்கும்அலரிச்செடிகளின்மேல்எங்கள்கின்னரங்களைத்தூக்கிவைத்தோம்.

3.
எங்களைச்சிறைபிடித்தவர்கள்அங்கேஎங்கள்பாடல்களையும், எங்களைப்பாழாக்கினவர்கள்மங்களகீதத்தையும்விரும்பி: சீயோனின்பாட்டுகளில்சிலதைஎங்களுக்குப்பாடுங்கள்என்றுசொன்னார்கள்.

4.
 கர்த்தரின் பாட்டைஅந்நியதேசத்தில்நாங்கள்பாடுவதெப்படி?

5.
எருசலேமே, நான்உன்னைமறந்தால்என்வலதுகைதன்தொழிலைமறப்பதாக.

6.
நான்உன்னைநினையாமலும், எருசலேமைஎன்முக்கியமானமகிழ்ச்சியிலும்அதிகமாகஎண்ணாமலும்போனால், என்நாவுஎன்மேல்வாயோடுஒட்டிக்கொள்வதாக.

7.
 கர்த்தாவே, எருசலேமின்நாளில்ஏதோமின்புத்திரரைநினையும்; அவர்கள்: அதைஇடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும்இடித்துப்போடுங்கள்என்றுசொன்னார்களே.

8.
பாபிலோன்குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீஎங்களுக்குச்செய்தபடிஉனக்குப்பதில்செய்கிறவன்பாக்கியவான்.

9.
உன்குழந்தைகளைப்பிடித்து, கல்லின்மேல்மோதியடிக்கிறவன்பாக்கியவான்.

---------------------------------------------by-Robert Dinesh-----------------------------------------
 
 


__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard