'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமது தவறான பேச்சு முறைகள்


adminn

Status: Offline
Posts: 29
Date:
நமது தவறான பேச்சு முறைகள்
Permalink  
 


குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும்  பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பதுவாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம்கூட ஒரேயோருவார்த்தையினால் பிரிந்து விடும்ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ளதீப்பொறி போன்றது நாவு.
 
யாக்கோபு-3:5 அப்படியேநாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும்பாருங்கள்சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!
 
எப்படியெல்லாம் நாம் பேசக் கூடாது என வேதம் தெளிவாக நமக்கு கற்றுத்தருகிறது. அது குறித்துப் பார்ப்போம்…
 
 
01 மற்றவர்களை எப்போதும் தாழ்த்தி பேசுதல்
நீதிமொழிகள்-11:12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான், புத்திமானோ தன் வாயைஅடக்கிக்கொண்டிருக்கிறான்.
 
 
02 மற்றவர்களின் குறைகள்,தவறுகளை குத்தி காட்டி பேசுதல்
நீதிமொழிகள் -26:9 மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி, வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
 
ஒரு வெறியனின் கையில் ஒரு முள்ளு கிடைத்தால் அவன் அதைக் கொண்டு எல்லாரையும் குத்தி வேதனைப்படுத்திக் கொண்டு திரிவான். அதேபோல ஒரு மூடன் தன் வாயில் கிடைத்த பழமொழியைக் கொண்டு எல்லோரையும் குத்தி பேசுவான் என்கிறது இவ்வசனம்.
 
 
03 நம்மை எப்போதுமே உயர்த்தி பெருமையாக பேசுதல்
நீதிமொழிகள் -27:2  உன் வாய் அல்லபுறத்தியானே உன்னைப் புகழட்டும், உன் உதடு அல்லஅந்நியனே உன்னைப் புகழட்டும்.
 
யாக்கோபு-3:5  அப்படியேநாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும்பாருங்கள்சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!
 
 
04 ஒருவர் இல்லாதவிடத்து அவரைப்பற்றி தவறாக பேசுதல்-       புறங்கூறுதல்
நீதிமொழிகள் -10:18  பகையை மறைக்கிறவன் பொய் உதடன், புறங்கூறுகிறவன் மதிகேடன்.
நீதிமொழிகள் -25:23  வடகாற்று மழையையும்புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
சங்கீதம்-15:3  கர்த்தருடைய வீட்டில் தங்க தகுதியுள்ளவன் தன் நாவினால் புறங்கூறாமலும்தன்தோழனுக்குத் தீங்குசெய்யாமலும்தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சைஎடுக்காமலும் இருக்கிறான்.
 
 
05 மற்றவரின் கருத்தை முழுமையாக கேட்டு அறியாமல் 'இப்படித்தான் நடந்திருக்கும்என்று நாமேஒன்றை கற்பனை செய்து விட்டு பேசுதல்
யாக்கோபு-1:19  ஆகையால்என் பிரியமான சகோதரரேயாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும்பேசுகிறதற்குப் பொறுமையாயும்கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்,
 
 
06 கோள் சொல்லுதல்
நீதிமொழிகள் -16:28  மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான், கோள் சொல்லுகிறவன்பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
நீதிமொழிகள் -26:20  விறகில்லாமல் நெருப்பு அவியும், கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டைஅடங்கும்.
 
 
07 ஊர் வம்பு பேசுதல்
நீதிமொழிகள் -11:9  மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான், நீதிமானோஅறிவினால் தப்புகிறான்.
சங்கீதம்-73:9  தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள், அவர்கள் நாவு பூமியெங்கும்உலாவுகிறது.
 
 
08 வாக்குவாதங்கள்
ஆதியாகமம்-13:8  ஆபிராம் லோத்தை நோக்கிஎனக்கும் உனக்கும்என் மேய்ப்பருக்கும் உன்மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர்.
ஆபிரகாம் மூத்தவராயிருந்தாலும் லோத்துவுக்கு விட்டுக் கொடுத்தார். நமக்கெதுக்கு வாக்குவாதம்? விட்டுக் கொடுப்போமே!!
 
 
09 அவசரப்பட்டு முன்யோசனையின்றி பேசுதல்
பிரசங்கி-5:2  தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும்மனம்பதறி ஒருவார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய்ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
 
 
!!!! சில வேளைகளில் நம்ம வாய மூடுறது நல்லது !!!!
 
நீதிமொழிகள் -17:28   பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான், தன் உதடுகளைமூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
நீதிமொழிகள் -10:19   சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது, தன் உதடுகளைஅடக்குகிறவனோ புத்திமான்.
நீதிமொழிகள் -18:7   மூடனுடைய வாய் அவனுக்குக் கேடுஅவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக்கண்ணி.
 
 
கடிந்து கொள்ளுதல் நல்லது
 
நீதிமொழிகள் -28:23  தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும்கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
 
 
!!!! ஐயோ தெரியாம பேசிட்டேனே !!!!
 
பிரசங்கி-5:6   உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அதுபுத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலேகோபங்கொண்டுஉன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
 

 

நீதிமொழிகள் -18:21   மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும், அதில் பிரியப்படுகிறவர்கள்அதின் கனியைப் புசிப்பார்கள்.


__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 



இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

super

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard